Section 144 Prohibitory Order: இன்று முதல் 3 நாட்கள் ஊரடங்கு! எந்த மாவட்டம்? என்ன காரணம் தெரியுமா?
பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சியையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
tenkasi
பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்காக உள்ளுர் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
tenkasi
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் விழாவையொட்டி தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிமுதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணிவரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Spritual Tour for Vaishnava Temples: வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
tenkasi
பொது அமைதியை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு நபர்களுக்கு மேல் கூட்டமாகச் செல்லக் கூடாது. வாள், கத்தி, கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.