Schools Leave: விடாமல் போட்டு தாக்கும் கனமழை.. அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Heavy Rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு புதுச்சேரியில் தொடங்கிய மழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது.
Puducherry Heavy Rain
இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். லாஸ்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மழையால் பெரும்பாலான சாலைகளில் முழங்கால் வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எதிர்பாராதவிதமாக 2 மணிநேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான குட்நியூஸ்.. வெளியான அறிவிப்பு!
School Holiday
இந்நிலையில் கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Puducherry School Holiday
கோடை வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலைநாளாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் கனமழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.