இது மாதிரி பொண்ணுங்க தான் ஸ்கெட்ச்! பாலியல் தொழில் நடத்தி தாய், மகள் சொன்ன பகீர் தகவல்.!
வீட்டில் ரகசியமாக பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய தாய், மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Prostitution
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மயிலாம்பாறை நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனே அப்பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். பின்னர் பாலியல் தொழில் நடப்பது உறுதியானதை அடுத்து வீட்டில் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
Police Arrest
அப்போது பெண் புரோக்கர் தேவி(36) மற்றும் அவரது தாய் ராஜாம்பாள்(52) அங்கிருந்த ஜெயராமன் (58 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பெண்களையும் மீட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் தேவியிடம் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது வறுமையில் உள்ள பெண்களை குறி வைத்து அதிகம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
Women arrested
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட 5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.