- Home
- Gallery
- உயிரை உருக்கி நடித்த பிரித்விராஜ்.. நல்ல வரவேற்பை பெற்ற "ஆடு ஜீவிதம்".. OTT ரிலீஸ் எப்போ? அப்டேட் இதோ!
உயிரை உருக்கி நடித்த பிரித்விராஜ்.. நல்ல வரவேற்பை பெற்ற "ஆடு ஜீவிதம்".. OTT ரிலீஸ் எப்போ? அப்டேட் இதோ!
Aadujeevitham in OTT : பிரபல நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி, பெரிய அளவில் பேசப்பட்ட படம் தான் ஆடு ஜீவிதம்.

Blessy
தனது 20 ஆண்டுகால சினிமா பயணத்தில், வெறும் 9 திரைப்படங்களை நான் இயக்கியிருக்கிறார் என்றாலும், மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அன்பை சம்பாதித்துள்ள இயக்குனர் தான் Blessy. அவருடைய இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "ஆடு ஜீவிதம்".
Prithiviraj
பிரபல நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில், கடந்த 2018ம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கியது. மேலும் இந்த திரைப்பட பணிகளுக்காக ஜோர்டான் நாட்டிற்கு பிரிதிவிராஜ் மற்றும் படக்குழுவினர் சென்ற பொழுது, கொரோனா தாக்குதல் ஏற்பட்டு, மீண்டும் படக்குழு சில காலம் இந்தியா திரும்ப முடியாமல் போனது.
Rahman
பல மாத காத்திருப்பு, பல்வேறு வகையான போராட்டம் என்று கடும் நெருக்கடியில் உருவான ஒரு திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். வேலை தேடி வெளிநாட்டுக்கு செல்லும் ஒருவர், தனது வாழ்நாளில் படும் கஷ்டங்களை எடுத்துச் சொல்லும்விதம் இந்த திரைப்படம் இருந்தது. நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரனின் திரை வரலாற்றில், அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்திருந்தது Aadujeevitham.
Aadujeevitham
பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த திரைப்படம், கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியான நிலையில், சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா திரைப்படமாக மாறியது. இப்பொது இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 19ம் தேதி, NETFLIX தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.