கருணாநிதியை புகழ்ந்து தள்ளிய மோடி.! என்ன சொல்லியிருக்காருனு தெரியுமா.?
திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது போன்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாக உள்ளன. இந்த நிகழ்வில் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
திமுக- பாஜக நெருக்கம்
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பாஜகவிற்கு எதிராக தீவிர அரசியலை கடைபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு போட்டியாக திமுக திகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக திமுக பாஜக பக்கம் நெருங்கி வரும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திமுகவை பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் விமர்சனம் செய்வதை குறைத்துள்ளனர். அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சி புறக்கணித்த ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கருணாநிதி விழாவில் பாஜக தலைவர்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போன் போட்ட ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நாயணம் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அண்ணாமலையும் திமுக அமைச்சர்களோடு நெருக்கம் காட்டி வருகிறார். இந்தநிலையில் தான் இன்று மாலை கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாயணம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மோடி வாழ்த்து
இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதியை புகழ்ந்து பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
அழியாத முத்திரையை படைத்த கலைஞர்
இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு அரசியல் தலைவராக சிறந்து விளங்கியவர், சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தார். மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி என பெருமைப்படுத்தியுள்ளார்.
கலைஞர் என்ற அன்பான பட்டம்
கருணாநிதியால் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் 'கலைஞர்' என்ற அன்பான பட்டத்தைப் அவருக்கு பெற்றுத் தந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.