குறையும் காய்கறி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன தெரியுமா.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி உள்ளிட்ட ஒரு சில காய்களின் விலையானது குறைந்துள்ளது. தக்காளி கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய்க்கும், மற்ற காய்கறிகளின் விலையும் மாறுபட்டுள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி உள்ளிட்ட ஒரு சில காய்களின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
சுரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை நிலவரம்
கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களுக்கு 50 ஆயிரம் மானியம்.! புதிய திட்டம் அறிமுகம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.? வழிமுறை என்ன.?
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.