- Home
- Gallery
- Premgi Wedding Photos: காதலியை கரம் பிடித்தார் பிரேம்ஜி! காதலோடு கட்டி அணைத்து முத்தம்! திருமண போட்டோஸ்!
Premgi Wedding Photos: காதலியை கரம் பிடித்தார் பிரேம்ஜி! காதலோடு கட்டி அணைத்து முத்தம்! திருமண போட்டோஸ்!
45 வயதாகும், நடிகரும் - இசையமையாளருமான பிரேம்ஜி, தன்னுடைய காதலி இந்துவை இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இது குறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Premgi And Indhu Wedding
கோலிவுட் திரையுலகில், மிகப்பெரிய இசை குடும்பமாக பார்க்கப்படும் இளையராஜாவின் குடும்பத்து வாரிசு தான் பிரேம்ஜி. அதாவது இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் பிரேம்ஜி.
Premgi And Indhu Wedding
இசை தொடர்பான படிப்பை வெளிநாட்டில் பயின்ற பிரேம்ஜி, தமிழ் சினிமாவில்... கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஞாபகம் வருதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
Premgi And Indhu Wedding
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து சில படங்களுக்கு இவர் இசையமைத்த போதிலும், தன்னுடைய சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா அளவுக்கு பிரபலமாக வில்லை.
Premgi And Indhu Wedding
பின்னர் ஒரு நடிகராக கண்ட நாள் முதல், வல்லவன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும்... இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தில் நடித்தது தான்.
Premgi And Indhu Wedding
பின்னர் சப்தம் போடாதே, தோழா, சந்தோஷ் சுப்பிரமணியன், சத்யம், சிலம்பாட்டம், சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற பல படங்களில் காமெடி ரோலில் நடித்து பிரபலமானார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கும் அணைத்து படங்களிலுமே, பிரேம் ஜிக்கு ஹீரோவுடனே பணிக்கும் முக்கிய ரோல் கிடைத்துவிடும்.
Premgi And Indhu Wedding
அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி நடித்து வரும் கோட் படத்திலும் முக்கிய ரோலில் பிரேம்ஜி நடித்து வருகிறார். 45 வயதாகியும் முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜியின் திருமணம் எப்போது என தொடர்ந்து பலர் ஆவலோடு காத்திருந்த நிலையில், கடந்த மாதம் தன்னுடைய திருமண தகவலை பிரேம்ஜி உறுதி செய்தார்.
Premgi And Indhu Wedding
பின்னர் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் மீடியாவை சேர்ந்தவர் என்கிற தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்ட நிலையில்... அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு, திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
Divorce: திருமணமான நான்கே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Premgi And Indhu Wedding
இதை தொடர்ந்து நேற்று பிரேம்ஜிக்கு நடந்த ப்ரீ வெட்டிங் ரிசப்ஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில், இன்று காலை திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் தன்னுடைய காதலி இந்துவுக்கு, குடும்ப முறைப்படி தாலி கட்டிய பிரேம்ஜி... தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு நெற்றியில் காதலோடு முத்தம் கொடுத்துள்ளார்.
Premgi And Indhu Wedding
பிரேம்ஜி - இந்து திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். விரைவில் சென்னையில் திருமண ரிசப்ஷன் நடைபெற உள்ளது. இதில் கோலிவுட் திரையுலகின் பெரும்பாலான நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.