- Home
- Gallery
- கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் யோகா செய்த தீபிகா படுகோன்.. ஃபிட்டஸ்ட் அம்மா என பாராட்டும் ரசிகர்கள்..
கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் யோகா செய்த தீபிகா படுகோன்.. ஃபிட்டஸ்ட் அம்மா என பாராட்டும் ரசிகர்கள்..
கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் தான் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Deepika Padukone pregnant
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்தார். இந்த ஜோடி 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் அறிவிப்பை தீபிகா வெளியிட்டார்.
Deepika Padukone pregnant
மேலும் செப்டம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் இந்த ஜோடி தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் தீபிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
deepika padukone
ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் தீபிகா படுகோன், தனது மகப்பேறுக்கு முந்தைய யோகா பயணத்தைத் தொடங்கினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் தீபிகா படுகோன் ஒரு மேட்டில் படுத்திருப்பதையும், அவரின் கால்களை சுவரில் வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
Deepika Padukone
விபரீத கரணி ஆசனம் என்ற யோகாசானத்தை தான் தீபிகா படுகொன் செய்துள்ளார். இந்த ஆசனம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் தசைகள், மூட்டுகள் மற்றும் வீங்கிய கணுக்கால் மற்றும் பாதங்களில் வலியைப் போக்க உதவுகிறது. இந்த யோகாசனம் கீழ் முதுகில் அழுத்தத்தைக் குறைக்கவும், எடை மற்றும் சோர்வு உணர்வுகளைப் போக்கவும் உதவுகிறது என்று தீபிகா பதிவிட்டுள்ளார். .
Deepika Padukone baby bump
அவரின் பதிவில் மேலும் “ "நான் ஒரு நல்ல உடற்பயிற்சியை விரும்புகிறேன். நான் 'அழகாக இருப்பதற்காக' ஃபிட்டாக இருக்கவே உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இருப்பினும், நான் ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட முடியாதபோது , நான் இந்த எளிய 5 நிமிட வழக்கத்தை தினமும் செய்கிறேன், நான் உடற்பயிற்சி செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் ஃபிட்டஸ்ட் அம்மா என்று பாராட்டி வருகின்றனர்.
Deepika Padukone
மகப்பேறுக்கு முற்பட்ட யோகா என்பது பிரசவத்திற்கு தயாராகும் ஒரு அணுகுமுறையாகும். தீபிகா படுகோன் செய்த இந்த யோகா, கர்ப்பிணிகளுக்கு துகாப்பானது மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், மகப்பேறுக்கு முற்பட்ட யோகாவை எப்போதும் ஒரு நிபுணத்துவ யோகா ஆசிரியரின் வழிகாட்டுதல் படியே செய்ய வேண்டும்.