- Home
- Gallery
- 6 நாட்களில்... 'ஜெயிலர்' படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தும்சம் செய்த பிரபாஸின் 'கல்கி 2898 AD' !
6 நாட்களில்... 'ஜெயிலர்' படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தும்சம் செய்த பிரபாஸின் 'கல்கி 2898 AD' !
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லைஃப் டைம் வசூலை 6 நாட்களில் முறியடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநடி' படத்தை இயக்கி, தேசிய விருதையும் வென்றவர் இயக்குனர் நாக் அஸ்வின். தன்னுடைய முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகினர் அனைவரையும் வியக்க வைத்த நாக் அஸ்வின், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க சுமார் 6 வருடங்கள் ஆனது.
அதன்படி, இவர் இயக்கிய 'கல்கி 2898 AD' படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க, அவருடன் தீபிகா படுகோனே, திஷா பதானி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியான ஒரே வாரத்தில்... பல படங்களின் லைஃப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட வசூலையும் அடிச்சு தூக்கி தும்சம் செய்துள்ளது.
இப்படத்தின் 6 நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலில், நேற்றைய தினம் இப்படம் உலக அளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாகவும், இதன் மூலம் இதுவரை 'கல்கி 2898 AD' திரைப்படம் ரூ.680 கோடி வசூலித்துள்ளது. ஜெயிலர் படத்தின் லைப் டைம் வசூல் ரூ.650 கோடியாக இருந்த நிலையில், அதையே வெறும் 6 நாட்களில் மிஞ்சியுள்ளது பிரபாஸின் கல்கி 2898 AD திரைப்படம்.
தென்னிந்திய திரையுலகை கடந்து, வடஇந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பி பெற்று வரும் இப்படம் இதுவரை வடஇந்தியாவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகுபலி பாத்திற்கு பின்னர் மீண்டும் பான் இந்தியா ஸ்டார் என நிரூபித்துள்ளார் பிரபாஸ். மேலும் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.