- Home
- Gallery
- பிரபாஸ், ராம் சரண் முதல் நாகாஜுர்னா வரை.. தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸின் ஃபேவரைட் உணவு என்ன தெரியுமா?
பிரபாஸ், ராம் சரண் முதல் நாகாஜுர்னா வரை.. தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸின் ஃபேவரைட் உணவு என்ன தெரியுமா?
தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களாக வலம் சில நடிகர்களின் ஃபேவரைட் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tollywood Stars
தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் விருப்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் வாழ்க்கை முறைகளை அறிய பலரும் விரும்புகிறார்கள். ரசிகர்களை கவரும் விஷயங்களில் பிடித்தமான உணவுகளும் ஒன்று. அந்த வகையில் தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களாக வலம் சில நடிகர்களின் சில ஃபேவரைட் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் உணவுப் பிரியர். பெரும்பாலும் அசைவம் சாப்பிடுவாராம். பிரபாஸ் தனது கதாநாயகிக்கு விதவிதமான உணவுகளை வைத்து உபசரிப்பது வழக்கம். பிரபாஸின் விருப்பமான உணவு இறால் புலாவ் என்று கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆரும் அசைவ உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம். தனக்கு நாட்டுக் கோழி குழம்பு பிடிக்கும் என்று ஜூனியர் என்.டி.ஆர் ஒருமுறை கூறியிருந்தார். அதே போல் அவர் மட்டன் பிரியாணியும் விரும்பி சாப்பிடுவாராம்.
உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் ஹீரோக்களில் ராம் சரணும் ஒருவர். அதற்காக பிரத்யேக உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். கடுமையான டயட்டை பின்பற்றி வரும் அவருக்கு தென்னிந்திய மீன் வறுவல் மிகவும் மிகவும் பிடிக்குமாம்.
Mahesh Babu
மகேஷ் பாபு தனது உடல் அமைப்பையும், அழகையும் கவனமாக பாதுகாத்து வருகிறார். உடற்பயிற்சி, டயட் முறைகளை பின்பற்றினாலும் அவருக்கு ஹைதரபாத் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்குமாம்.
Chiranjeevi
மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கடல் உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் மீன், இறால் மற்றும் நண்டுகளை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வயதைக் கடந்தாலும் இளமையாகவே இருக்கும் நாகார்ஜுனா, ஆரோக்கிய உணவு பழக்கங்களை கொண்டிருக்கிறார். அவருக்கும் மிகவும் பிடித்த உணவு ஹைதராபாத் பிரியாணி.