திரையரங்குகளை கலக்கிய கல்கி 2898 AD.. OTTயில் எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!
Kalki 2898 AD in OTT : கடந்த ஜூன் மாதம் வெளியாகி உலக அளவில் மெகா ஹிட்டான கல்கி திரைப்படம் விரைவில் OTTயில் வெளிவரவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Nag Ashwin
கீர்த்தி சுரேஷின் மகாநதி திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் தான் நாக் அஸ்வின். அவருடைய இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD.
"டேய் ட்ரைலர் செம சூப்பர் டா" விஜய் மற்றும் GOAT படக்குழுவிற்கு வாழ்த்து சொன்ன தல அஜித்!
prabhas
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில், உலக அளவில் 1100 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறிய கல்கி திரைப்படத்தில், பிரபல நடிகர் அமிதாபச்சன், நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோனே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Kamal Haasan
2898ம் ஆண்டு நடைபெறும் கதைகளம் என்பதால் முற்றிலும் நவீன மயமாகிவிட்ட உலகை நம் கண் முன்னே காட்டி அசத்தியிருந்தார் நாக அஸ்வின். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது.
kalki in amazon prime
திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்து இப்படம் பயணித்து வரும் நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
ஆஸ்கார் மட்டுமல்ல, தேசிய விருதிலும் நான் தான் கிங்! அதிக தேசிய விருதுகளை பெற்ற ஒற்றை தமிழன்