பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. ஷாருக்கானை தோற்கடித்து 2ம் இடத்தில் பிரபாஸ் - அப்போ First யாருப்பா?
Box Office Collection : பிரபல நடிகர் ரெபெல் ஸ்டார் பிரபாஸ், பாலிவுட் உலகின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் வசூல் சாதனையை முறியடித்து, 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Kalki
இந்திய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஆயிரம் கோடி ரூபாய் என்கின்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான "கல்கி" திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து மகத்தான வெற்றிபெற்றுள்ளது.
Shah Rukh Khan
இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வெளியான படங்களை ஒப்பிட்டு, அதில் அதிக வசூல் சாதனை படைத்த நடிகர் யார் என்பதை கணக்கிட்டு பின்வரும் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் உலகின் பாஷாவாகவும், உலக அரங்கில் இந்திய சினிமாவின் முகமாகவும் திகழும், ஷாருக்கானின் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் சுமார் 1415.65 கோடியாகும். பதான், ஜவான் மற்றும் Dunki ஆகிய படங்களின் வசூல் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
rebel star
அதேபோல ராதே ஷியாம் , ஆதிபுருஷ், சலார் மற்றும் கல்கி ஆகிய திரைப்படங்களின் வசூலை ஒப்பிடும் பொழுது, பிரபாஸ் கொரோனா காலத்திற்கு பிறகு நடித்த திரைப்படங்களின் ஒட்டுமொத்த வசூல் சுமார் 1422.95 கோடியாக உள்ளது. இது இந்திய அளவில் அதிக வசூல் சாதனை படைத்த நடிகர்களின் பட்டியலில் அவரை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Deepika
ஆனால் தொடர்ச்சியாக முதல் இடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோனே தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திற்குப் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான 4 திரைப்படங்களின் மொத்த வசூல் சுமார் 1482.17 கோடி.
குறிப்பு : கொரோனா காலத்திற்கு பிறகு குறைந்த அளவிலான படங்களில் அதிக வசூல் கொடுத்தது ஷாருகான் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.