MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Salaar Pre Booking Collection: ரிலீசுக்கு முன்பே.. லட்ச கணக்கில் கல்லா கட்டிய 'சலார்'! முழு விவரம்..!

Salaar Pre Booking Collection: ரிலீசுக்கு முன்பே.. லட்ச கணக்கில் கல்லா கட்டிய 'சலார்'! முழு விவரம்..!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'சலார்' படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று துவங்கிய நிலையில், ஒரே நாளில் லச்ச கணக்கில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2023, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், பிரபாஸ். இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த 'பாகுபலி' படத்திற்கு பின்னர், உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமும் இது தான்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு பின்னர், இவர் நடித்த பிக் பட்ஜெட் படங்களான... சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சில விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு கிடைத்த பெருமை.! உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் படக்குழு!
 

35

இந்நிலையில் எப்படியும் இந்த ஆண்டு... வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் பிரபாஸ் உள்ள நிலையில், இவர் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சலார்' படம் தான். இரண்டு நண்பர்களின் நட்பை பற்றியும், அவர்களின் கொடூர பகையையும் மையமாக வைத்து KGF போல் மிக பிரமாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 

45

மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். பிரபாஸின் நண்பராக மலையாள நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்... படத்திற்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Kizhakku Vaasal: கொண்டாட்டத்தில் விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியல் குழு! வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!
 

55

நாளைய தினம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று இரவு 11 மணி அளவில் துவங்கப்பட்டது. டிக்கெட் புக்கிங் துவங்கி இன்னும்... 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், தற்போது வரை இப்படம், சுமார் 30 லட்சம் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி ஆந்தரவில் 13.25 லட்சமும், தெலுங்கானாவில் 6 லட்சமும், வட இந்தியாவில் 5.25 லட்சமும், கர்நாடகாவில் 3.25 லட்சமும், கேரளாவில் 1.5 லட்சமும், தமிழகத்தில் 1 லட்சமும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved