- Home
- Gallery
- Kalki 2898 AD OTT: ஸ்பெஷல் நாளில் OTT-யில் வெளியாகிறதா 'கல்கி 2898 AD'.! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!
Kalki 2898 AD OTT: ஸ்பெஷல் நாளில் OTT-யில் வெளியாகிறதா 'கல்கி 2898 AD'.! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் 'கல்கி 2898 AD' படம் குறித்த ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான 'கல்கி 2898 AD', கடந்த ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இரண்டே வாரத்தில் சுமார் 1000 கோடி வசூலை அள்ளியுள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருப்பதால், கண்டியப்பாக மற்ற தென்னிந்திய திரைப்படங்களின் வசூல் சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாபாரத கதையுடன், கலியுகத்தை கன்னெக்ட் செய்து... இந்த படத்தை ஹாலிவுட் பட தரத்திற்கு இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸை தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன், போன்ற பலர் முக்கிய வேடத்திலும்... மிருணாள் தாகூர், ராஜமௌலி, விஜய் தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
Indian 2 Live Update: 'இந்தியன் 2' படத்தில்.. சேனாதிபதியாக கமல் கலக்கினாரா? LIVE அப்டேட்ஸ்!
இந்நிலையில் கல்கி படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கல்கி படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரேம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ள நிலையில், படத்தை ஸ்பெஷல் நாளை குறிவைத்து வெளியிட முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்கி OTTயில் ரிலீஸ் ஆக உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.