Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அம்பத்தூர், அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அத்திப்பட்டு, சோத்துபெர்ம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
அம்பத்தூர்:
சிட்கோ தொழிற்பேட்டை, ஈபி சாலை 1வது தெரு, அப்பாசாமி சாலை, வடக்கு கட்டத்தின் 9வது மற்றும் 10வது தெரு, 7வது மற்றும் 8வது தெரு டாஸ் எஸ்டேட், மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
Today Power Shutdown
அடையாறு:
4வது மெயின் ரோடு காந்தி நகர், 2வது மற்றும் 3வது கிரசண்ட் பார்க் ரோடு, 3வது மெயின் ரோட்டின் ஒரு பகுதி.
Power Shutdown in Chennai
அஸ்தினாபுரம்:
ஆர்பி சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபாஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாஷியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு.
Today Power Cut
மடிப்பாக்கம்:
ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் (எஸ்), குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (என்), ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
Power Shutdown in Chennai
அத்திப்பட்டு:
ஜுவாரி சிமெண்ட்ஸ், அதானி கண்டெய்னர் டெர்மினல் லிமிடெட், BHEL NCTPS ஸ்டேஜ் IV தளம், IOCL LNG லிமிடெட், எல்&டி ஷிப் பில்டிங், 33/11 KV NCTPS ஸ்டேஜ்-I SS.
Power Cut Chennai
சோத்துபெர்ம்பேடு:
நேருகுன்றம், சோத்துபெரும்பேடு பகுதி, செக்கஞ்சேரி, அட்டபாளையம், கன்னியம் பாளையம், பசுவன் பாளையம், ஞானயிறு கிராமம், மஃபுஷ்கான்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.