Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மட்டும் பவர் கட்!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
Power Cut
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Chennai Power Shutdown
அயப்பாக்கம்:
அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III, ஐசிஎப் காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், கேஎஸ்ஆர் நகர், ஈடன் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.