- Home
- Gallery
- Power Shutdown in Chennai: சென்னையில் நாளை மின்தடை! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
Power Shutdown in Chennai: சென்னையில் நாளை மின்தடை! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குரோம்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
குரோம்பேட்டை:
கடப்பேரி, நாங்கல்கேணி, மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்புகள், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு.
Power Shutdown in Chennai
எண்ணூர்:
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.