சென்னையில் இத்தனை இடங்களில் இன்று மின் தடையா.? உங்க ஏரியா இருக்கா.? இதோ லிஸ்ட்
சென்னையின் அண்ணா நகர், பஞ்செட்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (30.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் மின்சார தடை
நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் வாழ மாறிவிட்டனர். இதன் காரணமாக மின்சார தேவையில்லாமல் மக்களால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது. சமையல் வேலையில் இருந்து வீட்டில் துணி துவைப்பது வரை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் மின்சார பராமரிப்பு பணிக்காக தினமும் ஒவ்வொரு பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் அண்ணா நகர் பஞ்செட்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (30.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் மேற்கு:
எச் பிளாக், 11வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி, ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, 15வது பிரதான சாலை எச் பிளாக்
பஞ்செட்டி :
வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, கரணி, புதுவொயல், பெருவொயல், பெருவொயல், பெருவொயல். கவரப்பேட்டை, கீழ்முதல்பேடு, மேல்முதலம்பேடு, தண்டலச்சேரி, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி,
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கோலாகலமாக தொடக்கம்
ஆவடி:
ஆவடி பேருந்து நிலையம், சோதனைச் சாவடி, என்எம் சாலை, நந்தவன மேட்டூர், கஸ்தூரிபாய் நகர், கஸ்தூரிபாய் நகர் பஜார், சி.டி.எச்.ரோடு, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டி.ஆர்.நகர், பெரியார் தெரு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயில் காவல் நிலையம், பிஎஸ்என்எல் - சிடிஎச் சாலை, எச்விஎஃப் சாலை ஆகிய இடங்களில் இன்று காலை மின் தடை செய்யப்படவுள்ளது. பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.