- Home
- Gallery
- Vijay : பூவே உனக்காக முதல்.. லியோ வரை.. வசூல் மன்னனாக மாறிய விஜய் - டாப் 5 Box Office ஹிட்ஸ் ஒரு பார்வை!
Vijay : பூவே உனக்காக முதல்.. லியோ வரை.. வசூல் மன்னனாக மாறிய விஜய் - டாப் 5 Box Office ஹிட்ஸ் ஒரு பார்வை!
Thalapathy Vijay : கடந்த பல ஆண்டுகளாக சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், Box Office மன்னனாகவும் கலக்கி வருகின்றார் பர்த்டே பாய் தளபதி விஜய்.

Poove unakaga movie
தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டுகளின் இறுதியில் பல ஹிட் திரைப்படங்களை கொடுக்க தொடங்கினார் தளபதி விஜய். அந்த வகையில் 1996ம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான, "பூவே உனக்காக" என்கின்ற திரைப்படம் சுமார் 270 நாள் ஓடி முதல் முறையாக தளபதி விஜய்க்கு மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. அன்றைய காலகட்டத்திலேயே இந்த திரைப்படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
Ghilli
தொடர்ச்சியாக நல்ல பல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜயின் ஒட்டுமொத்த திரை வாழ்க்கையை கணக்கெடுத்தால், அதில் டாப் 3 திரைப்படங்களில் "கில்லி" திரைப்படம் ஒரு படமாக நிச்சயம் இருக்கும். ஆக்ஷன் ஹீரோவாக அவருக்கு மெகா ஹிட்டான படம் அது. சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே சுமார் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி இந்த 2024 ஆம் ஆண்டு அது ரீரிலீஸ் செய்யப்பட்டபோது சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Mersal Vijay
தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களை கொடுத்து வந்த தளபதி விஜய் அவர்களுக்கு 250 கோடி ரூபாய் என்கின்ற அளவை தாண்டி வெற்றி கண்ட முதல் திரைப்படம் என்றால் அது அட்லீ இயக்கத்தில் வெளியான "மெர்சல்" திரைப்படம் தான். "ஆளப்போறன் தமிழன்" என்று அவரது அரசியல் வருகையை அறிவிக்க துவங்கிய படமும் அதுதான்.
Bigil Vijay
இளைய தளபதியாக இருந்த விஜய், தளபதியாக மாறி விஸ்வரூபம் எடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுக்க தொடங்கினார். அப்போது முதல் முறையாக அவருக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் அதிக வசூலை கொடுத்த திரைப்படமாக மாறியது பிகில் மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல.
leo vijay
இந்நிலையில் தளபதி விஜய் அவர்களுடைய திரை வரலாற்றிலேயே அவருக்கு மிகப்பெரிய வசூல் வெற்றியை தேடித்தந்த ஒரு திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டுகளிலும் பல சாதனைகளை படித்தது. குறிப்பாக மலையாள மொழியிலும் பெரும் வசூலை குவித்த லியோ சுமார் 625 கோடி box office சாதனை புரிந்தது.