வாஸ்துப்படி வீட்டில் பூஜை அறையை இப்படி வைங்க..பணத்திற்கு பஞ்சம் வராது...!
Pooja Room Vastu Tips : உங்கள் வீட்டு பூஜை அறைக்கு வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றினால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளை நீங்கள் பின்பற்றினால், அது உங்களது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
முக்கியமாக, வீட்டில் இருக்கும் பூஜை அறையில் கூட வாஸ்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். இதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளை பெற முடியும். கூடுதலாக, இது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.
வாஸ்துபடி வீட்டின் வடக்கு திசையில் பூஜை அறை இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையில் கதவு கிழக்கு நோக்கி பார்த்து இருக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிலவும்.
பூஜை அறைக்கு அருகில் படுக்கையறை, குளியலறை இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!
அதுபோல வீட்டில் பூஜை அறை காற்றோட்டமாகவும் போதுமான வெளிச்சம் தடும்படியாகவும் இருக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். முக்கியமாக பூஜை அறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டில் பணம் புழங்க.. மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போடுங்க..!
பூஜை அறையின் சுவர் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர்மஞ்ச நிறத்தில் தான் இருக்க வேண்டும். அதர் நிறங்களை பயன்படுத்தக் கூடாது. மங்கள கலசம் மற்றும் கங்கை நீரை வீட்டு பூஜை அறையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.