கைதாகிறாரா சீமான்.? ஷாக் கொடுக்க காத்திருக்கும் போலீஸ்
சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஆடியோக்களால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திருச்சி எஸ்பி வருண்குமாரை சீமான் விமர்சித்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வருண்குமாரின் குடும்பத்தினரை ஆபாசமாக பேசியதாகக் கூறி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக- சீமான் மோதல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டவர்கள் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக சார்பாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கலைஞரை விமர்சிக்கும் சண்டாளன் என்ற பாடலை பாடி பிரச்சாரம் செய்தார். சாண்டாளன் என்ற வார்த்தை ஆதி திராவிட பிரிவில் ஒரு அமைப்பாகும். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து தென்காசியில் வைத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
சாட்டை துரைமுருகன் ஆடியோ
ஆனால் அன்றைய தினமே சாட்டை துரைமுருகனை நீதிமன்றம் விடுதலை செய்ததது. ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. குறிப்பாக சீமான், இயக்குனர் அமீர் உள்ளிட்டோருடன் பேசிய ஆடியோக்கள் இணையதளத்தில் வீக் ஆனது. இதற்கு சாட்டை துரைமுருகன் இதற்கெல்லாம் காரணம் திருச்சி எஸ்.பி. வருண்குமார் என குற்றம்சாட்டினார். ஏற்கனவே பல முறை சாட்டை துரைமுருகனை எஸ்.பி .வருண்குமர் பல வழக்குகளில் கைதும் செய்துள்ளார்.
திருச்சி எஸ்பியை விமர்சித்த சீமான்
இந்தநிலையில் தான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பகிரங்கமாகவும் விமர்சித்தார். இதனையடுத்து திருச்சியில் பல இடங்களில் எஸ்பி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் சமூக வலைதளத்தில் வருண் குமார் மற்றும் அவரது மனைவி தொடர்பாக ஆபாச கருத்துகளை வெளியிட்டனர். இதனையடுத்து சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்ய்பட்டுள்ளது.
Jothimani
கண்டனம் தெரிவித்த ஜோதிமணி
இது தொடர்பாக கரூர் எம்பி ஜோதி மணி வெளியிட்டுள்ள பதிவில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான,அறுவெறுத்தக்க,ஒரு நாகரிமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத கமெண்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.(பொதுவெளியில் பதிவிட முடியாத அளவிற்கு ஆபாசமானவை)
seeman
பெண் எஸ்பிக்கே இந்த நிலையா.?
ஒரு பெண்,அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவரது மார்பையும், உடலையும் மட்டுமே பார்க்கிற,அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ,பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் விடுத்த நபர்களை விட மாட்டேன்
இந்தநிலையில் இது தொடர்பாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என கூறியுள்ளார்.