டபுள் மடங்கா திரும்பி தர வந்திருக்கேன்! துள்ளிய குணசேகரனுக்கு ஆப்பு வைத்த போலீஸ்! எதிர்நீச்சல் ப்ரோமோ!
எதிர்நீச்சல் சீரியலில், ரீ என்ட்ரி கொடுத்துள்ள புதிய ஆதி குணசேகரன் ஆரம்பத்திலேயே ஓவர் ஆட்டம் போட்ட நிலையில், தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ள புரோமோ தான் வெளியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் 'எதிர்நீச்சல்'. ஆணாதிக்க குணத்தால் பெண்களை, அடக்கி வைக்க நினைக்கும் குணாதிசயம் கொண்ட மனிதரை ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வீட்டு பெண்கள் எதிர்த்து போராடுவதை பரபரப்பான கதைக்களத்துடன் இயக்கி வருகிறார் இயக்குனர் திருச்செல்லாம்.
இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பின்னர், இவர் ஏற்று நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், சில முன்னணி குணச்சித்திர நடிகர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.
பின்னர் ஒரு வழியாக மாரிமுத்து கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராம மூர்த்தி கமிட் ஆனார். இவருடைய காட்சிகள் கடந்த ஒரு வாரமாக சீரியலில் இடம் பெற்று வருகிறது. எனினும், இவரை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் பலர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது. அதில் விசாலாட்சி தன்னுடைய மருமகள்களை மிரட்டும் விதமாக, "ஏய் முன்ன மாதிரி நீங்க அவன்கிட்ட நக்கல் நையாண்டி பண்ண முடியாது. சிங்கம் மாதிரி வந்திருக்கான் பாத்தீங்கள்ல ஈஸ்வரி வாங்குனதை என கூறுகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை தொடர்ந்து அதிரடியாக போலீசார் ஆதி குணசேகரன் வீட்டுக்குள் நுழைகின்றனர். கதிர் வாங்குனது பத்தலையா என கேட்க, வாங்குவதை டபுல்லாக திருப்பி கொடுக்க தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார் போலீஸ். பின்னர் குணசேகரன் ஓவராக சத்தம் போட, விட்டுட்டு போகலாம்னு தான் பார்த்தேன், அண்ணனும் தம்பிகளும் சேர்ந்து எகுறுறீங்க விடமாட்டேன் என போலீசார், அண்ணன் தம்பி மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.