Petrol Diesel Price in Chennai Today : இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? நிலவரம் என்ன? இதோ தகவல்!
எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் 143வது நாட்களாக விலையில் எந்த மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
Petrol Diesel
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
Petrol Diesel Price
இதையடுத்து, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 142 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் தெரியுமா?
Petrol Diesel Price in Chennai
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 143வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.