- Home
- Gallery
- “கண்டிப்பா 2-வது திருமணம் செய்வேன்.. தாம்பத்திய வாழ்க்கை வேணும்..” 42 வயது பிரபல நடிகை ஓபன் டாக்..
“கண்டிப்பா 2-வது திருமணம் செய்வேன்.. தாம்பத்திய வாழ்க்கை வேணும்..” 42 வயது பிரபல நடிகை ஓபன் டாக்..
பவன் கல்யாணின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ரேணு தேசாய் தனது 2-வது திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

பொதுவாக படங்களில் ஒன்றாக பணியாற்றும் பிரபலங்கள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்று தான். திரையில் ரீல் ஜோடிகளாக நடித்த பல பிரபலங்கள், ரியல் ஜோடிகளாக மாறுகின்றனர். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதே கேள்வி. சிலர் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், சில பிரபலங்கள் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அப்படி பிரிந்து போன நட்சத்திர தம்பதி தான் பவன் கல்யாண் - ரேணு தேசாய் தம்பதி.
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் நடிகை ரேணு தேசாய்க்கும் பத்ரி படத்தில் ஒன்றாக பணியாற்றிய காதல் மலர்ந்தது. பல ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணத்திற்கு முன் அகிரா நந்தன் என்ற மகன் இருந்தான். திருமணத்திற்குப் பிறகு ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
Pawan renu
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் பிரிந்தனர். இதனிடையே ரேணு இரண்டாவது திருமணத்திற்கு தயாரானார். ரேணு தேசாய் ஒருவருடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். ஆனால் யார் என்று அவர் கூறவில்லை. எனினும் அவர் தனது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விட்டு தனியாக இருக்க முடிவு செய்தார். கிட்டத்தட்ட 12 வருடங்களாக தனிமையில் இருந்த அவர் தனது மகன் அகிரா நந்தன் மற்றும் மகள் ஆத்யாவின் வளர்ப்பையும் படிப்பையும் கவனித்துக்கொள்கிறார்.
pawan renu
இதனிடையே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரேணு தேசாய்.. சமீபத்தில் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் நடித்த அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். ரேணு தேசாய் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். தன்னைப் பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, ரேணு தேசாய் பேட்டியளித்திருந்தார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.. தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். மேலும் தனது 2-வது திருமணத்தை ரத்து செய்ததற்கான உண்மையான காரணத்தையும் அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அவர் “ அப்போது என் குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவைப்பட்டது. அவர்களுக்கு உதவி தேவை. திருமணம் செய்து கொண்டால் கணவனுடன் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். இந்த செயல்பாட்டில், இரண்டு குழந்தைகள் தனியாக இருக்கும் சூழல் உருவாகும்.
ஏற்கனவே தந்தை இல்லாமல் தவித்து வரும் குழந்தைகள் தானும் இல்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் பிள்ளைகள் வளர்ந்து விடுவார்கள். கல்லூரிக்கு செல்வார்கள். அப்போது அவர்களுக்கு நண்பர்கள், காதலர்கள் என்ற புதிய உலகம் கிடைக்கும். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். அவர்கள் பெற்றோரை அதிகம் சார்ந்திருக்க மாட்டார்கள், அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மட்டுமே பெற்றோர் தேவை, ஆனால் அவர்களுக்கு நாள் முழுவதும் பெற்றோர் தேவையில்லை.
Renu Desai
பிறகு நான் சுதந்திரமாக இருப்பேன், என் திருமணத்தை அனுபவிக்க முடியும். அதனால்தான் இத்தனை வருடங்களாக காத்திருக்கிறேன். எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன், எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும், எல்லோரையும் போல தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
Pawan Kalyan
குழந்தைகளும் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். திருமணம் செய்து கொள்ளுங்கள் அம்மா என்று என்னிடம் கூறுகிறார். நீங்கள் யாருடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, யாருடைய அக்கறையை நீங்கள் விரும்புகிறீர்களோ அவர்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் போது நான் தனிமையை உணர்கிறேன். எனவே 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.