- Home
- Gallery
- 7ம் வகுப்புக்கு தமன்னா பற்றிய பாடம் எதுக்கு? தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்
7ம் வகுப்புக்கு தமன்னா பற்றிய பாடம் எதுக்கு? தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் புகார்
பெங்களூருவை சேர்ந்த சிந்தி என்கிற தனியார் பள்ளியில் நடிகை தமன்னாவை பற்றி 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Tamannaah
மில்க் பியூட்டி என்று அழைக்கப்படுபவர் தமன்னா. இவர் தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த சுக்ரன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார் தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார்.
Tamannaah Bhatia
கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பற்றி பெங்களூருவில் உள்ள சிந்தி என்கிற தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்கிற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்று உள்ளது. இதனால் கொந்தளித்த அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Indian 2: ஒரு பாட்டுக்கு மட்டும் 30 கோடி செலவு.. அடேங்கப்பா இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?
Tamannaah photos
நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் அந்த பாடத்தில் கற்க வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய பெற்றோர், இந்த விவகாரம் குறித்து ஆங்கில வழி பள்ளிகளுக்கான நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
chapter about Tamannaah in 7th std book
நடிகை தமன்னா தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் அண்மையில் தமிழில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.
இதையும் படியுங்கள்... உச்ச நடிகர்களின் 50-வது படம் ஹிட்டா, ஃபிளாப்பா? ரஜினி, விஜய் செய்யாததை செய்த விஜய் சேதுபதி..