உங்க குழந்தை பொய் சொல்லுவது தெரிஞ்சா இனி அடிக்காதீங்க.. இப்படி நடத்துங்க!
Parenting Tips : உங்கள் பிள்ளைகள் பொய் சொல்வதை நீங்கள் கண்டால் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் வளரும் வரை அவர்களிடம் பல மாற்றங்கள் நாம் காண முடியும். அவற்றில் ஒன்று தான் போய் 'பொய்'. ஆம், குழந்தைகள் ஒரு காலகட்டத்தில் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள்.
அதாவது தாங்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க, பெற்றோருக்கு பயந்து பொய் சொல்லுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அப்படி பொய் சொல்கிறார்கள் என்று நீங்கள் உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
உண்மையில், உங்கள் குழந்தை ஒரு சிறிய விஷயத்திற்கு பொய் சொல்கிறீர்கள் என்றால் அவர்கள் அதிக புத்திசாலிகள். மேலும், அவர்கள் சொன்ன பொய் குறித்து அன்பாய் அவர்களைத் திருத்துங்கள். ஒருவேளை அவர்கள் பெரிய பொய்களை கூறும் போது அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் குழந்தை பொய் சொல்வதை நீங்கள் அறிந்தால் அவர்கள் மீது கோபப்படவோ, அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களை அன்பாய் கையாளுங்கள். அவர்கள் செய்தது தவறு என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்க சரியான வயது எது தெரியுமா? பெற்றோர்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க
என்ன செய்தாலும் சரி உண்மையை சொல்ல தைரியம் வேண்டும்.. பொய் சொல்லுபவர்கள் தான் பயப்படுவார்கள். இப்படி உங்கள் குழந்தைகளிடம் சொல்லிப் பாருங்கள். அவர்கள் பொய் சொல்லும் பழக்கத்தை மாற்ற வாய்ப்பு உண்டு.
இதையும் படிங்க: உங்க குழந்தையை இப்படி பழக்கப்படுத்துங்க.. லைப்ல நல்லா இருப்பாங்க!!
குழந்தைகள் ஏதாவது தவறு பண்ணினால் தான் அதை மறைக்க பொய் சொல்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளிடம் தவறு செய்வது சகஜம் தான், அதற்காக ஒருபோதும் பொய் சொல்லாதே தவறு ஒப்புக்கொண்டு, அதிலிருந்துது பாடம் கற்றுக் கொள் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D