- Home
- Gallery
- மின் கட்டணத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறது?
மின் கட்டணத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறது?
மின் கட்டண உயர்வை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Ration Shop
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2007-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள்.
Minister Sakkarapani
இந்நிலையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட முதலே ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் சரிவர கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் அரசு தரப்பில் துவரம் பருப்பு, பாமாயில் பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். மேலும், ஜுன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் ஜுலை மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
Dal and Palm Oil
இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தற்போது தமிழக அரசு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 வரை அதிகரித்து உள்ளது. தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு கிலோ ரூ.30-க்கும் , பாமாயில் ரூ. 25-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Palm Oil and Dal Price High
இதனால் ரேஷனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.