- Home
- Gallery
- சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் – இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!
சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் – இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும்.

United States vs Pakistan, 11th Match
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இந்தியா விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.
United States vs Pakistan, 11th Match
கனடா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய ஒரு போட்டிகளில் தோல்வி அடைந்து அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் அமெரிக்கா கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எஞ்சிய 2 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு சென்றுவிடும்.
United States vs Pakistan, 11th Match
இதே போன்று இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் 9ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். மாறாக பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
United States vs Pakistan, 11th Match
நேற்று நடந்த அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுக்க போட்டியானது டிரா செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் அமெரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.