MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • T20 World Cup 2024: மறக்க முடியாத சம்பவம்: பாகிஸ்தானுக்கு ஒரே வரியில் ரியாக்‌ஷன் கொடுத்த சோயிப் அக்தர்!

T20 World Cup 2024: மறக்க முடியாத சம்பவம்: பாகிஸ்தானுக்கு ஒரே வரியில் ரியாக்‌ஷன் கொடுத்த சோயிப் அக்தர்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஒரே வரியில் ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Jun 15 2024, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
T20 World Cup 2024 Super 8, Pakistan

T20 World Cup 2024 Super 8, Pakistan

நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில், இடம் பெற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன. பாகிஸ்தான், இந்தியா, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று விளையாடின.

27
Pakistan T20 World Cup 2024

Pakistan T20 World Cup 2024

இதில், டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி இந்தியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்திருந்தது. அமெரிக்கா 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3ஆவது இடத்திலும் இருந்தன.

37
T20 World Cup 2024

T20 World Cup 2024

பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அமெரிக்கா தோற்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஒருவேளை இந்தப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அமெரிக்கா வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.

47
Pakistan

Pakistan

அதன்படியே, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் விளையாடிய அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பின்னர் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது.

57
T20 World Cup 2024, Pakistan Elimination

T20 World Cup 2024, Pakistan Elimination

கனடாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக நாளை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

67
Pakistan Elimination

Pakistan Elimination

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஒரே வரியில் தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணம் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

77
Pakistan cricket Team

Pakistan cricket Team

இந்த தொடரில் பாகிஸ்தான் படு மோசமாக விளையாடியுள்ளது. இதற்கு அந்த அணியில் அடிக்கடி கேப்டன்ஷிப் மாற்றப்பட்டதே காரணமாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் டி20 தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பை பை என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாகிஸ்தான்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved