MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பையா முதல் தி லெஜண்ட் வரை... ‘ஆள விடுங்க நான் நடிக்கவே மாட்டேன்’ என நயன்தாரா ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா?

பையா முதல் தி லெஜண்ட் வரை... ‘ஆள விடுங்க நான் நடிக்கவே மாட்டேன்’ என நயன்தாரா ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இதுவரை நடிக்க மறுத்த தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2024, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Nayanthara Rejected Movies

Nayanthara Rejected Movies

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் நயன்தாரா. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் பட்டைய கிளப்பி வருகிறார். தற்போது அவருக்கு வயது 40ஐ நெருங்கினாலும் இன்னும் மவுசு குறையாமல் செம்ம பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இதுவரை தமிழில் நடிக்க மறுத்த திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

27
பையா (Paiyaa)

பையா (Paiyaa)

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் பையா. கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ஆனால் முதலில் தமன்னாவுக்கு பதில் இப்படத்தில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாததன் காரணமாக அவர் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

37
சிங்கம் 2 (Singam 2)

சிங்கம் 2 (Singam 2)

ஹரி - சூர்யா கூட்டணியில் உருவான சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்த ஹரி அதில் வாலே வாலே என்கிற பாடலுக்கு அஞ்சலியை ஐட்டம் டான்ஸ் ஆட வைத்திருந்தார். இந்த பாடலுக்கு முதலில் அவர் அணுகியது நயன்தாராவை தானாம். ஆனால் அவர் ஆட மறுத்துவிட்டதால் அஞ்சலியை கமிட் செய்தார்களாம்.

47
ஒரு கல் ஒரு கண்ணாடி (oru kal oru kannadi)

ஒரு கல் ஒரு கண்ணாடி (oru kal oru kannadi)

ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக அறிமுகமான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் முதலில் இதில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ராஜேஷ் அணுகியது நயன்தாராவை தானாம். ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதையும் படியுங்கள்... மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள நயன்தாராவின் 'TEST' படப்பிடிப்பு நிறைவு! வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு!

57
சென்னை எக்ஸ்பிரஸ் (Chennai Express)

சென்னை எக்ஸ்பிரஸ் (Chennai Express)

ஷாருக்கான் - தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். அந்த பாடலுக்கு ஆட முதலில் படக்குழு நயனை தான் அணுகினார்களாம். அவர் ஐட்டம் டான்ஸ் ஆட மறுத்துவிட்டதால் பிரியாமணியை ஆடை வைத்திருக்கிறார்கள்.

67
தி லெஜண்ட் (The Legend)

தி லெஜண்ட் (The Legend)

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினார்களாம். ஆனால் அவர் முடியவே முடியாது என ஸ்டிரிக்ட் ஆக சொல்லி ரிஜெக்ட் பண்ணி விட்டாராம். இந்த தகவலை அப்படத்தின் இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோரே பேட்டியில் கூறி இருந்தனர்.

77
திருச்சிற்றம்பலம் (Thiruchitrambalam)

திருச்சிற்றம்பலம் (Thiruchitrambalam)

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் நித்யா மேனன் நடித்திருந்த கேரக்டரில் முதன்முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். ஆனால் அவர் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து நித்யா மேனனை நடிக்க வைத்துள்ளனர். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்... க்யூட்டாக போஸ் கொடுக்கும் சாந்தனு - கிகி.. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved