ரூ.5,400 இருந்தால் போதும் ஷீரடி சாய் பாபாவை தரிசித்துவிட்டு வரலாம்.. உடனே டிக்கெட் போடுங்க!
ஒரு நபருக்கு ரூ.5,400க்கு கீழ் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த ஐஆர்சிடிசி சுற்றுலாப் பயணப் பேக்கேஜ்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
Shirdi Tour Under 6000 Rupees
ஐஆர்சிடிசி டூரிசம் ஒரு நபருக்கு ரூ. 5,400 க்கும் குறைவான விலையில் உள்ள டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷனின் (IRCTC) சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி டூரிசம், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இயக்கப்படும் விடுமுறைப் பேக்கேஜ்களை வழங்குகிறது.
IRCTC Tour Package
ஐஆர்சிடிசி மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று ஆன்மீகத் தலங்களுக்கான பயணத்தை வழங்குகிறது. ஷீரடி, ஷானிஷிங்னாபூர் மற்றும் திரிம்பகேஷ்வர் கோவில் ரூ. 4,590 ஆகும். சுற்றுலா நிறுவனம் குறைந்தபட்சம் மூன்று நபர்களுடன் நான்கு நாள், மூன்று இரவு பயண டூர் பேக்கேஜை வழங்குகிறது.
Shirdi Darshan
இந்த சுற்றுப்பயணத்தின் சில முக்கிய சிறப்பம்சங்கள் இங்கே பார்க்கலாம். ஐஆர்சிடிசியின் இந்த டூர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை இயங்கும். காலை உணவு மற்றும் இரவு உணவுகள் அடங்கும்.
Sai Darshan Tour Package
ஷீரடியில் ஒரு இரவு தங்குதல், ஹோட்டல் சாய்ஸ்ரி அல்லது அதுபோன்ற இடத்தை வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதிகளவு சைவ உணவை ஆர்டர் செய்யும் இந்திய நகரம்.. அயோத்தி, ஹரித்வார் அல்ல.. எது தெரியுமா?