- Home
- Gallery
- தேசிய விருது படம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்ற பான் இந்தியா நடிகை யார் தெரியுமா?
தேசிய விருது படம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்ற பான் இந்தியா நடிகை யார் தெரியுமா?
பிரபல தென்னிந்திய நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

பல தென்னிந்திய படங்கள் பான் இந்திய அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக மாறி வருகின்றன. இதனால் பல தென்னிந்திய நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். அந்த வகையில் ஒரு நடிகை, ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை. சமந்தா தான். ரூ.100 கோடி சொத்து மதிப்பு கொண்ட தென்னிந்திய பணக்கார நடிகைகளில் ஒருவரான சமந்தா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3.5 முதல் 4 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த பிளாக்பஸ்டர் படத்திற்காக, சமந்தா நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்றார். ஆம். புஷ்பா: தி ரைஸ் படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா நடனமாடினார். இந்த பாடல் நாடு முழுவதும் படு வைரலானது. இந்த பாடலுக்கு மட்டும் சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படம் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாத்க்கும் கிடைத்தது. இந்த படத்தின் 2-ம் பாகமான புஷ்பா: தி ரூல் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக உள்ளது.
சமந்தா தற்போது சிட்டால் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் தொடர் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிக்க சமந்தா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இப்போது OTT இல் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக அவர் இருக்கிறார்.
மறுபுறம், சமந்தா பங்காரம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி உள்ளார். இந்த படத்தில் அவர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சமந்தா சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.