- Home
- Gallery
- அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Old Pension Scheme
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
Thangam Thennarasu
இந்நிலையில் நேற்று கேள்வி நேரம் நடந்தது. அப்போது நிதி, மனித வள மேலாண்மை ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வு கால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
Government Employee
அப்போது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ptr palanivel thiagarajan
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறை படுத்துவது சாத்தியமற்றது என தமிழக முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.