MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஓலா, ஊபர் கால் டாக்சி புக் பண்ண போறீங்களா? 20 கி.மீ. தூரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

ஓலா, ஊபர் கால் டாக்சி புக் பண்ண போறீங்களா? 20 கி.மீ. தூரத்திற்கு எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்களின் போராட்டத்தை அடுத்து ஓலா, ஊபர் வாடகை கார்களின் கட்டணம் கடுமையாக உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Oct 19 2023, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செல்போன் செயலி மூலம் கார், ஆட்டோ புக் செய்து பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஓலா, ஊபர் போன்ற செயலியை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடை செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள் அறிவித்திருந்தனர். 

23

அதன்படி கடந்த திங்கள்கிழமை சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை, திருச்சி, கோவையிலும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மேலும் விரிவுப்படுத்த சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்போவதாகவும், இதில்,1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

33

இந்நிலையில், குறைந்த அளவிலான ஓட்டுநர்களே வாகனங்களை இயக்கி வருவதால் ஓலா, ஊபர் பயணக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போராட்டத்திற்கு முன் சென்னையில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
ஓலா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved