- Home
- Gallery
- ஒன்னுல்ல ரெண்டுல்ல.. ரூ.34 ஆயிரம் தள்ளுபடி.. மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம சான்ஸ்..
ஒன்னுல்ல ரெண்டுல்ல.. ரூ.34 ஆயிரம் தள்ளுபடி.. மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம சான்ஸ்..
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ பயணிக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். இது தற்போது மிக குறைந்த விலையில் மற்றும் தள்ளுபடி உடன் கிடைக்கிறது.

Budget Electric Scooter Offer
இன்று பெரும்பாலானோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மின்சார ஸ்கூட்டர்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. பல நிறுவனங்களின் EV ஸ்கூட்டர்கள் வெகுஜனங்களுக்கு மலிவு விலையில் கிடைக்கின்றன.
Electric Scooter
ஜப்பானை தளமாகக் கொண்ட ஒகாயா EV தனது மின்சார ஸ்கூட்டர்களுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஒகாயா ஈவி (Okaya EV) அதன் பல்வேறு மாடல்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரை உங்கள் மொபைலில் இருந்தே Flipkartல் புக் செய்யலாம். Okaya Electric Fast F4 மாடலில் பெரும் தள்ளுபடி கிடைக்கும்.
Okaya
இந்த ஸ்கூட்டரின் அடிப்படை விலை ரூ.1,50,112 (எக்ஸ்-ஷோரூம்). ஆனால் நீங்கள் 11% பிளாட் தள்ளுபடியுடன் வெறும் 1,32,500 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, கிரெடிட் கார்டு சலுகையையும் பெறலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்கூட்டரை வாங்கினால் ரூ.16,125 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
Faast F4 Electric Scooter
ஒட்டுமொத்தமாக, நீங்கள் இந்த ஸ்கூட்டரை வாங்கினால் ரூ.34,000 தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்கூட்டரை பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்யலாம். வாகனப் பதிவு மற்றும் காப்பீட்டுக் கட்டணத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஸ்கூட்டர் 3 ஆண்டுகள் அல்லது 30,000KM வரை உத்தரவாதத்துடன் வருகிறது.
Okaya EV
இந்த உத்தரவாதமானது பேட்டரிக்கு பொருந்தும். இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ பயணிக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும்.
Okaya Faast F4 Electric Scooter
டியூப்லெஸ் டயர்கள், டூயல் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்பிரிங்-லோடட் ரியர் சஸ்பென்ஷன், டெலஸ்கோ பிக்ஃபோர்க் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன், ரிவர்ஸ் பட்டன், ரிமோட் ஸ்டார்ட் அண்ட் ஸ்டாப் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
EV Offers
நீங்கள் எளிதான NO Cost EMI இல் ஸ்கூட்டரையும் வாங்கலாம். 1 ஆண்டு காலத்திற்கு 11 ஆயிரம், 24 மாத காலத்திற்கு 6,500, 18 மாத காலத்திற்கு 8,300 செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..