ஆகஸ்ட் 23ஆம் தேதியும் விடுமுறை.! தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி கல்லூரி லீவு- மாணவர்கள் ஹேப்பி
ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. .
ஆகஸ்ட் மாதம்- மாணவர்கள் கொண்டாட்டம்
ஆகஸ்ட் மாதம் வந்ததில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு சந்தோஷமாக உள்ளனர். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் பல பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி விடுமுறை
இதனை தொடர்ந்து இன்று தான் மீண்டும் பள்ளி தொடங்கியுள்ள நிலையில் வருகிற சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டுள்ளனர். இதே போல அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறை விடப்படுவதால் பெற்றோர்கள் தங்களது உறவினர்களை பார்க்கவும், சுற்றுலாவிற்கு செல்வும் திட்டமிட்டு வருகின்றனர். இந்தநிலையில் 3 நாட்கள் விடுமுறை மட்டும் கிடைக்கும் என எதிர்பார்த்துகொண்டிருந்த மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட்டாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
இதன் படி தென்காசி மாவட்டத்தில் வருகிற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம். அமி சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 23.08.2024 (வெள்ளி) அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு. நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் எதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைகொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வேலைநாள்
ஆகஸ்ட் 23ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டர்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வாய்ப்பு உருவாகியுள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!