ஆலியா.. நயன்.. தீபிகா.. இவங்க யாருமே இல்ல.. படத்துக்கு 40 கோடி சம்பளம் வாங்கும் இந்திய நடிகை யார் தெரியுமா?
Indian Heroines : இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு நிகராக, சில நேரங்களில் ஹீரோக்களை விட அதிகமாக ஹீரோயின்கள் சம்பளம் பெற்று வருகின்றனர்.
Alia Bhatt
ஹிந்தி மொழியை தாண்டி பிற மொழிகளில் இன்னும் நடிக்கவில்லை என்றாலும், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை தான் ஆலியா பட். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை மணந்துள்ள ஆலியா பட், குழந்தை நட்சத்திரமாகவே பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமாகி கடந்த 25 ஆண்டுகளாக அதில் பயணித்து வருகிறார். ஒரு திரைப்படத்திற்கு சுமார் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் அவர்.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
deepika padukone
கன்னட மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், இன்று பாலிவுட் உலகின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தீபிகா படுகோனே. அவ்வப்போது கன்னடம், ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கல்கி திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். பாலிவுட் உலகில் இவர் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம்.
Nayanthara
மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி, இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நயன்தாரா. தற்பொழுது அவருடைய நடிப்பில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தன்னுடைய கதாபாத்திரத்தை பொறுத்து ஒரு திரைப்படத்திற்கு 10 முதல் 12 கோடி வரை இவர் சம்பளமாக பெறுகிறார்.
priyanka chopra
இன்று ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என்று இரண்டு திரை உலகிலும் உச்ச நட்சத்திரமாக வளம் வருகிறார் பிரியங்கா சோப்ரா என்றாலும், அவர் அறிமுகமானது தளபதி விஜயின் "தமிழன்" திரைப்படத்தின் மூலம் தான். கடந்த 22 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் பயணித்து வரும் பிரியங்கா சோப்ரா, பாலிவுட் உலகில் ஒரு திரைப்படத்திற்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
ஆனால் அவர் அண்மையில் Netfilx நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றிய படத்திற்காக, சுமார் 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதுவே அவரை இந்தியாவின் டாப் நடிகையாக மாற்றியுள்ளது.
ஒளி மங்கும் மாலை நேரம்.. கவர்ச்சி உடையில் அனலை கூட்டும் ஈஷா ரெப்பா - ஹாட் பிக்ஸ்!