MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சத்தான காய்கறி, பருப்பு கூட இல்ல.. வெறும் மஞ்சள் தூள் போட்ட சாதம் தான் - அரசு பள்ளியில் அவதிப்படும் பிஞ்சுகள்!

சத்தான காய்கறி, பருப்பு கூட இல்ல.. வெறும் மஞ்சள் தூள் போட்ட சாதம் தான் - அரசு பள்ளியில் அவதிப்படும் பிஞ்சுகள்!

Chhattisgarh School's Mid Day Meals : ஒரு வேலை உணவுக்காக மட்டுமே அரசு பள்ளிகளை நாடி செல்லும் குழந்தைகள் இன்றளவும் உள்ள நிலையில், அங்கும் அவர்களுக்கு அது சரிவர கிடைப்பதில்லை என்பதே கொடுமை.

2 Min read
Author : Ansgar R
Published : Jul 07 2024, 11:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Government school

Government school

அரசு பள்ளிகளில் Mid Day Meals என்கின்ற ஒரு திட்டமானது பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்திய அளவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இது முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்றால் அது சந்தேகத்திற்கு உரியதே. அந்த வகையில் சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஊட்டச்சத்து என்பதே சிறிதும் இல்லாத மதிய உணவு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பிள்ளைகள் சத்தாக வளர தேவையான காய்கறிகள், பருப்பு என்று எதுவுமே இல்லாமல், சாதத்தில் வெறும் மஞ்சள் தூள் கலந்து குழந்தைகளுக்கு பரிமாறுவதாக புகார் எழுந்துள்ளது.

நீட் தேர்வு கவுன்சிலிங் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
midday meals

midday meals

இது இப்படி இருக்க, சில மாநிலங்களில் மாணவர்களுக்கு வெறும் சப்பாத்தியும் உப்பு மட்டுமே மத்திய உணவாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகள், வயிறார உண்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வளர, ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கவேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாய்யை மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் நிலையிலும் கூட வெகு சில பள்ளிகளில் தரமற்ற, ஊட்டச்சத்து என்பதே இல்லாத உணவுகள் வழங்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுகிறது.

34
Government school midday meals

Government school midday meals

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜகுரா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயிலும் 43 மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், வெறும் மஞ்சத்தூள் மட்டுமே சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பள்ளியில் போதிய அளவிலான காய்கறி விநியோகம் செயல்படுத்தப்படாததே வெறும் மஞ்சள் சோறு வழங்க காரணம் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

44
Government school Chhattisgarh

Government school Chhattisgarh

ஆனால் பள்ளியில் இருந்து நிலுவைத் தொகையை வழங்காததால் தான் பள்ளிக்கு காய்கறி விநியோகம் செய்வதை நிறுத்தியதாக ஒப்பந்தக்காரர் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் இப்படி பொறுப்பை தட்டிக்கழித்து பேசுவதால் பாதிக்கப்படுவது என்னமோ குழந்தைகள் தான். இந்த சம்பவம் குறித்து அப்பள்ளியில் உணவு சமைக்கும் தேவி என்பவர் பேசியபோது "எங்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் சரி வர வருவதில்லை. சில நேரங்களில் வெறும் பருப்பும் சாதமும் மட்டும் கிடைக்கின்றது. சில நேரத்தில் அதுவும் இல்லாத காரணத்தினால், சாதத்துடன் மஞ்சள் சேர்த்து பிள்ளைகளுக்கு வழங்குகிறோம்" என்று கூறியிருக்கிறார். 

இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி தேவேந்திரநாத் மிஸ்ரா உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

போலி கால் சென்டர் நடத்தி கோடி கோடியாக சுருட்டிய மோசடி கும்பல்! புட்டு புட்டு வைக்கும் கருப்பு டைரி!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved