"அதெல்லாம் வெறும் வதந்தி.. நாங்க இளையராஜாவுக்கு இழப்பீடு எதும் கொடுக்கல - Manjummel Boys படக்குழு அதிரடி!
Manjummel Boys : இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில், "குணா" திரைப்பட பாடல் இடம் பெற்றது சர்ச்சையானது.
malayalam movie
திரைத்துறையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் துவக்கம் என்பது மலையாள திரை உலகிற்கு தான் மிகப்பெரிய ஆண்டாக மாறியது என்றால் அது மிகையல்ல. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியான "மஞ்சுமல் பாய்ஸ்" என்கின்ற மலையாள திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது.
Manjummel boys movie
மஞ்சுமல் பாய்ஸ் ஒரு மலையாளத் திரைப்படம் என்றாலும் கூட, தமிழகத்தில் நடப்பது போல பெரும் பகுதி அமைக்கப்பெற்றிருந்ததால், தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
Isaignani
இந்நிலையில் அந்த படம் வெளியாகி பல மாதங்கள் கழித்து, படத்தில் இடம்பெற்ற தனது "குணா" திரைப்பட பாடலை மேற்கோள்காட்டி, அதற்கான காப்புரிமை பெறாமல் அப்பாடலை படத்தில் பயன்படுத்தியதால், அதற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று படக்குழுவினருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார் இசைஞானி இளையராஜா. இந்நிலையில் இன்று வெளியான ஒரு சில தகவல்களின்படி, இளையராஜாவிற்கு அந்த நஷ்டஈடை மஞ்சுமல் பாய்ஸ் பட குழு கொடுத்ததாக கூறப்பட்டது.
Ilayaraja
ஆனால் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு, கொடுத்ததாக சொல்லப்படும் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை என்பர் மறுத்துள்ளனர் படக்குழுவினர். ஏற்கனவே அந்த பாடலுக்கான உரிமம் உள்ளவருக்கு, உரிய தொகையை கொடுத்த பிறகு தான் அந்த பாடல் உருவானது என்றும் கூறியுள்ளார். ஆகையால் இளையராஜாவிற்கு தாங்கள் எந்தவிதமான நஷ்டஈடும் கொடுக்கவில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.