Nithya Menon Movie: ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்!
தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இவர் நடிக்கும் ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படு பிஸியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நித்யா மேனன் நடிக்கும், புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப், பிரதீக் பாப்பர், மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்ளனர்.
இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். மேலும் இப்படம் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.
Nithya menon
விஜய், துல்கர் சல்மான், என பல முன்னணி நடிகர்களுடனும்... வித்தியாசமான கதைக்களங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டும் நித்யா மேனன், முதல் முறையாக ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்க உள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது.