- Home
- Gallery
- முகலாய பேரரசர் ஷாஜகானின் நகையை அணிந்திருந்த நீதா அம்பானி.. அதன் மதிப்பு ரூ.200 கோடியாம்..
முகலாய பேரரசர் ஷாஜகானின் நகையை அணிந்திருந்த நீதா அம்பானி.. அதன் மதிப்பு ரூ.200 கோடியாம்..
கடந்த மார்ச் மாதம் நீதா அம்பானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் தனது கைகளில் அணிந்திருந்த கல்கி என்ற ஆபரணம் பேசு பொருளாக மாறியது. அவர் அணிந்திருந்த ஆபரணத்தின் மதிப்பு ரூ. 200 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

Nita Ambani
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது நேர்த்தியான பேஷன் தேர்வுகள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். விலையுயர்ந்த வைரங்கள், தங்கம் மற்றும் மரகத நகைகளை நீதா அம்பானி தனது பேஷன் தேர்வுகள் மூலமும் எப்போதும் கவனம் பெற்று வருகிறார்.

Nita Ambani
தனது வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது பொது நிகழ்ச்சியாக இருந்தாலும்ச் சரி, எப்போதுமே நீதா அம்பானியின் ஆடை, ஆபரணங்கள் தலைப்பு செய்திகளாக மாறுகின்றனர்.
Nita Ambani Wore Shah Jahans Kalgi
அந்த வகையில் கடந்த மார்ச் 9-ம் தேதி மும்பையில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட நீதா அம்பானி கைத்தறி புடவையில் அசத்தினார். அவரது பரோபகாரப் பணிக்காக 'பியூட்டி வித் பர்பஸ் மனிதாபிமான விருது' நீதாவுக்கு வழங்கப்பட்டது.
Nita Ambani Wore Shah Jahans Kalgi
இருப்பினும், நீதா அம்பானி தனது கைகளில் அணிந்திருந்த கல்கி என்ற ஆபரணம் பேசு பொருளாக மாறியது. அவர் அணிந்திருந்த அந்த கல்கி விலை ரூ. 200 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நகை ஒரு காலத்தில் முகலாய பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
Nita Ambani Wore Shah Jahans Kalgi
நீதா அம்பானி அணிந்திருந்த பாஜுபந்த் கல்கி ஷாஜகானுக்குச் சொந்தமான ஒரு விலையுயர்ந்த நகை என்று டெல்லியை தளமாகக் கொண்ட அருங்காட்சியக ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரமோத் குமார் கேஜி, தெரிவித்துள்ளார்.
Nita Ambani Wore Shah Jahans Kalgi
இந்த செழுமையான ஆபரணம் ஏறக்குறைய ரூ.200 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அணிந்திருந்த கல்கி நகையின் உயரம் 13.7 செ.மீ மற்றும் 19.8 செ.மீ அகலம் கொண்டது என்றும், இது தங்கத்தால் ஆனது மற்றும் வைரங்கள், மாணிக்கங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.
Nita Ambani Wore Shah Jahans Kalgi
2019 ஆம் ஆண்டு ஏலத்தில் விலக்கப்படுவதற்கு முன்னர், AI தானி கலெக்ஷனில் இந்த அழகான நகை கடைசியாக காணப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nita Ambani
நகைகளை நேசிக்கும் நீதா அம்பானி, அவற்றை மீண்டும் ஸ்டைலிங் செய்வதில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. பல்வேறு மகள் இஷா திருமணம், மகன் ஆனந்த் அம்பானி திருமணம் உட்பட பல நிகழ்ச்சிகளில் நீதா விலை உயர்ந்த வைர, மாணிக்கம் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார்.
Nita ambani most expensive saree
விலைமதிப்பற்ற நகைகளை சேகரிப்பது மட்டுமின்றி, விலை உயர்ந்த புடவைகளை பதுக்கி வைப்பதிலும் பெயர் பெற்றவர் நீதா அம்பானி. 2015 இல், ரிலையன்ஸ் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரியான பரிமல் நத்வானியின் மகனின் திருமணத்திற்காக அவர் மிகவும் விலையுயர்ந்த சேலையை அணிந்திருந்தார். இந்த சேலையை சென்னை சில்க்ஸ் இயக்குனர் சிவலிங்கம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.