60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அவரது அழகின் ரகசியம் இதோ!
நீதா அம்பானியின் அழகின் ரகசியம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

பொதுவாகவே, ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, நம்முடைய முகத்தின் பொலிவு குறையத் தொடங்கும். தற்போது இளம் பெண்கள் கூட இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றன. ஆனால், 60 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கும் பிரபலம் ஒருவர் இருக்கிறார். அவர்தான் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி.
60 வயதிலும் நீதா அம்பானியின் உடற்தகுதி இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. நீதா அம்பானியின் அழகு பலரது கவனத்தை ஈர்க்கிறது. எனவே, நீதா அம்பானியின் ஃபிட்னஸ் ரகசியம் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
நிதா அம்பானி தனது முகத்திற்கு க்ளென்சரை பயன்படுத்துகிறார். இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்வதோடு மட்டமான, தேவையான ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. தவிர, இறந்த சருமத்தை அகற்றி, சருமத்தை பிரகாசமாக்குகிறது.
நீதா அம்பானியின் பளபளப்பான சருமத்தின் ரகசியம் என்னவென்றால், டோனர் மற்றும் சீரம் தான். தோலின் pH அளவை டோனர் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, சீரம் வைட்டமின் ஈ, சி போன்ற பலவற்றை கொண்டுள்ளது, இது சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் மாற்றுகிறது.
அதுபோல, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சருமத்திற்கு ஊட்டமளிக்க மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறார். மாய்ஸ்சரைசர் சருமத்தை நீரேற்றமாகவும், வறண்டு போகாமலும் தடுக்கிறது. மேலும், சன்ஸ்கிரீன் வயதானதைக் குறைக்கவும், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
60 வயதிலும் நீதா அம்பானியின் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம், உடற்பயிற்சி மற்றும் யோகா தான்.. நீதா அம்பானி நடை பயிற்சி, கார்டியோ, புல்அப்ஸ், புஷ்அப் என இதுபோன்ற உடற்பயிற்சிகள் செய்கிறார்.
இதையும் படிங்க: 1984-ல் சிம்பிளாக நடந்த திருமணம்.. முகேஷ் - நீதா அம்பானியின் வெட்டிங் போட்டோஸ் வைரல்..
நீதா அம்பானி உணவுக் கட்டுப்பாட்டிலும் மிகவும் கண்டிப்பானவர். சூப்கள், பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் குஜராத்தி உணவுகள் போன்றவற்றை தான் விரும்பி சாப்பிடுவாராம்.
இதையும் படிங்க: தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி! பிஜி தீவில் இருந்து வரும் ஸ்பெஷல் வாட்டர்!
முக்கியமாக, நீதா அம்பானி தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பாராம். இது அவரின் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இவற்றை எல்லாம் முறையாக பின்பற்றுவதால் தான் 60 வயதிலும், நிதா அம்பானி மிகவும் இளமையாக இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D