- Home
- Gallery
- எழிலுக்கு தெரியாமல் பிளான் போடும் குழந்தைகள்.. இந்து செய்யப்போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
எழிலுக்கு தெரியாமல் பிளான் போடும் குழந்தைகள்.. இந்து செய்யப்போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழிலுக்கு சிறந்த டாக்டருக்கான விருது கொடுக்க உள்ள நிலையில் கனகவல்லி பசங்களையும் அழைத்து செல்ல சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, எழில் பசங்க அங்க வேண்டாம் என்று சொல்ல கனகவல்லி இல்ல கூட்டிட்டு போங்க அப்போ தான் அவங்களுக்கும் உங்களை பத்தி தெரியும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். இவர்கள் எல்லாரும் பங்ஷனுக்கு கிளம்பி வருகின்றனர். இந்துவும் புருஷன் விருது வாங்குவதை பார்ப்பதற்காக இந்த பங்ஷனுக்கு வருகிறாள்.

அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் செழியன் பேசி முடித்து எழிலுக்கு விருது கொடுக்க இந்துமதி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள், குழந்தைகள் பங்க்ஷனில் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்திருக்க திடீரென சாக்லேட் வைத்திருப்பதை பார்க்கின்றனர், அப்பாவுக்கு தெரியாமல் போய் சாக்லேட் சாப்பிடணும் என்று பிளான் போடுகின்றனர்.
ninaithen vandhai serial
இதை கவனித்த இந்து பசங்க சாக்லேட் சாப்பிடுறதை எழில் பார்த்தா அவ்வளவு தான், அவருக்கு சாக்லேட் சாப்பிடுறது பிடிக்காதே என்று பிள்ளைகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ன செய்வது என்று யோசிக்கிறாள்.
ninaithen vandhai serial
இந்த நேரத்தில் பிள்ளைகளும் எழிலுக்கு தெரியாமல் சாக்லேட் எடுப்பதற்காக வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.