- Home
- Gallery
- Ninaithen Vandhai: இந்துவின் இறப்பிற்கு எழிலும் காரணமா? உண்மையில் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
Ninaithen Vandhai: இந்துவின் இறப்பிற்கு எழிலும் காரணமா? உண்மையில் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் தவறி விழ போன எழிலை சுடர் தாங்கி பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, எழில் காலில் இருக்கும் கட்டுக்களை அவிழ்க்க அதை பார்த்த சுடர் ஏன் என்னாச்சு? எதுக்கு கட்டை அவிழ்க்கறீங்க என்று கேள்வி கேட்க அவன் சுடரை திட்டி வெளியே போக சொல்ல அந்த நேரம் பார்த்து அங்கு வரும் மனோகரி சுடர் திட்டு வாங்குவதை பார்த்து ரசிக்கிறாள். எழிலுடன் சேர்ந்து அவளும் சுடரை திட்டி சந்தோசப்பட்டு கொள்கிறாள்.
சுடர் வருத்தமாக கீழே வர அங்கு கனகவல்லி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்னாச்சும்மா என்று கேட்க நாளைக்கு ஒரு முக்கியமான நாள் இந்துவோட நினைவு நாள் என்று வருத்தப்படுகிறாள். சுடர் எனக்கும் நாளைக்கு ஒரு முக்கியமான நாள் விசா கிடைக்க போகும் நாள் என்று சொல்கிறாள். கனகவல்லி இந்துவுக்கு அப்புறமா நீ தான் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்ட, இப்போ நீயும் போய்ட்டா குழந்தைகள் கஸ்டப்படுவாங்க என்று வருத்தப்படுகிறாள், இருந்தாலும் நீயும் இப்படியே இருக்க முடியாதுல என்று சொல்லி மனசை தேற்றி கொள்கிறாள்.
குழந்தைகள் பட்டாளத்துடன் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘வானவன்’ படப்பிடிப்பு நிறைவு!
அதனையடுத்து சுடர் இந்துவின் தாலியை எடுத்து வைத்து கொண்டு இது என் கைக்கு கிடைச்சு 1 வருஷம் ஆகிடுச்சு, இன்னும் சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்க முடியல என்று வருத்தப்படுகிறாள். மறுநாள் எழில் இந்து போட்டோ முன்னாடி நின்று என்னை மன்னிச்சுடு மன்னிச்சுடு என்று அழுது கொண்டிருக்கிறான்.
அன்னைக்கு நான் மட்டும் உன்கூட வந்திருந்தா இப்படி நடந்திருக்காது என்று கலங்குகிறான். அப்படியே பிளாஷ்கட் ஒபெனாகிறது. அதில் இந்து போன் செய்து எழிலை தன்னுடன் அவன் வேலை இருப்பதாக சொல்லி வர மறுத்து விட்ட விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.