- Home
- Gallery
- சவால் விட்ட சுடர்.. உதவ முன்வரும் இந்து! மனோகரியின் சதி திட்டம் முறியடிக்கப்படுமா? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
சவால் விட்ட சுடர்.. உதவ முன்வரும் இந்து! மனோகரியின் சதி திட்டம் முறியடிக்கப்படுமா? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழிலிடம் சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சுடர் குழந்தைகளை ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் கலந்துக்க வச்சு ஜெயிக்க வைக்கிறேன். உங்க பேரு குழந்தைகளால் காப்பாற்றுவேன் என்று சொல்கிறாள். இதை எடுத்து உனக்கு உறுதுணையா நான் இருக்கேன். குழந்தைகளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்க வைக்கலாம் என்று சொல்கிறாள்.
இதை அடுத்து மனோகரி மற்றும் செல்வி இருவரும் கூட்டு சேர்ந்து இந்த போட்டியில் குழந்தைகளை தோற்க வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று பிளான் போடுகின்றனர்.
அடுத்ததாக குழந்தைகள் எல்லோரும் எப்படி கேமில் கலந்து கொண்டு ஜெயிப்பதே இன்று பயத்தில் இருக்க சுடர் நான் காணாமல் போனபோது நீங்க தானே தைரியமா என்ன தேடி வந்தீங்க.. அப்படி இருக்கும் போது உங்களால கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று மோட்டிவேட் செய்கிறாள்.
இதைக் கேட்டு குழந்தைகளும் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம் என்று சவால் விட்டு மறுநாள் காலையில் ஸ்கூலில் போட்டிக்காக பெயர் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.