- Home
- Gallery
- ஒற்றை கேள்வி... கழுத்தை நெரித்த மனோகரி! ரவுடிகளால் காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
ஒற்றை கேள்வி... கழுத்தை நெரித்த மனோகரி! ரவுடிகளால் காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலி சாமியார் வேடத்தில் வந்த ராமையா மனோகரியை தீ சட்டியை எடுக்க வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மனோகரி பரிகாரம் செய்து கஷ்டப்படுவதை சுடரும் நான்கு குழந்தைகளும் பார்த்து சந்தோசப்படுகின்றனர், இதனையடுத்து வீட்டிற்கு வந்த மனோகரி சாப்பிட போக நான்கு குழந்தைகளும் சேர்ந்து நீங்க விரதம், சாப்பிட கூடாது என்று சாப்பாட்டை பிடிங்க சாப்பிட போன மனோகரி கடுப்பாகிறாள்.
அடுத்து மீண்டும் சாமியாராக வரும் ராமையா மனோகரி தலை மேல் கையை தூங்கி கும்பிடு.. போட்டு கொண்டு துளசி மாடத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி சுற்ற விட, சுடர் ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க என்று கேட்க அவ என்னை எல்லாம் கொஞ்சம் நஞ்சமா படுத்தினா என்று சொல்கிறார். தூரத்தில் இருந்து இதையெல்லாம் இந்து பார்த்து விடுகிறாள்.
அதன் பிறகு இந்து தீபாவிடம் சுடர் எதுக்கு மனோகரியை அவ்வளவு கஷ்டப்படுத்துறா என்று கேட்க எனக்கும் அந்த மனோகரி மேல் சந்தேகம் இருக்கு.. அவ நல்லவ மாதிரியே தெரியல என்று சொல்கிறாள், அடுத்து செல்வி சோகமாக உட்கார்ந்திருக்கும் மனோகரியுடம் வந்து எழில் ஐயாவும் இந்துவும் சேர்ந்து வாழ்ந்த 10 வருஷம் நீங்க எங்க போய் இருந்தீங்க என்று கேள்வி கேட்கிறாள்.
இதனால் பயங்கர கோபமடையும் மனோகரி, செல்வி கழுத்தை நெரித்து இது மாதிரி கேள்வி எல்லாம் கேக்க கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள். அதன் பிறகு நான்கு ரவுடிகள் மனோகரி போட்டோவை காட்டி இவளை பார்த்தீங்களா? என்று விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.