- Home
- Gallery
- இந்துவாக மாறிய சுடர்.! கனகவல்லிக்கு ஷாக், நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
இந்துவாக மாறிய சுடர்.! கனகவல்லிக்கு ஷாக், நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து சுடரின் உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து ஓட விட்டு பிறகு வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பிள்ளைகள் ட்ராயிங் செய்து கொண்டிருக்க அங்கு சுடராக வந்த இந்து அம்மா வந்து இருக்கேன் என்று சொல்லி குழந்தைகளோடு விளையாடி சந்தோஷப்படுகிறாள். பிறகு குழந்தைகள் பசிப்பதாக சொன்னதும் வெஜிடபிள் பிரியாணி சமைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்து சந்தோஷப்படுகிறாள்.
அடுத்ததாக கனகவல்லி ரூமுக்கு வந்து அத்தை என்று சொல்லி கூப்பிட கனகவல்லி என்ன புதுசா அத்தைனு கூப்பிடுற? நீ அப்படி கூப்பிட மாட்டியே என்று குழப்பம் அடைய சுடர் எதையோ சொல்லி சமாளிக்கிறாள். அதன்பிறகு கனக வல்லிக்கு மாத்திரை கொடுத்துவிட்டு வெளியே வருகிறாள்.
இதையடுத்து இந்து சுடர் உருவத்தில் எழில் ரூமுக்குள் நுழைகிறாள். எழில் தூங்கிக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் உட்காரும் இன்று உங்களோடு சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனால் அது ரொம்ப நாள் நினைக்காம போயிடுச்சு என்று பேசி ஃபீல் பண்ணுகிறாள்.
பிறகு எழில் பக்கத்தில் படுத்து அவன் மீது கை போட்டு கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.