- Home
- Gallery
- தங்க செருப்பு முதல்.. வைரம் பதித்த புடவை வரை! வரலட்சுமிக்கு நிக்கோலாய் கொடுத்த பரிசுகளை பட்டியல் போட்ட பயிவான்
தங்க செருப்பு முதல்.. வைரம் பதித்த புடவை வரை! வரலட்சுமிக்கு நிக்கோலாய் கொடுத்த பரிசுகளை பட்டியல் போட்ட பயிவான்
நடிகை சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் என்கிற தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவியாக மாறி உள்ள நிலையில், வரலட்சுமிக்கு நிக்கோலாய் கொடுத்த பரிசுகளை பட்டியல் போட்டு கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

varalaxmi
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும், வில்லி -குணச்சித்திர நடிகை என தன்னுடைய அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை மிரளவைத்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 2013 ஆம் ஆண்டு வெளியான 'போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இவருடைய முதல் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது. குறிப்பாக வரலட்சுமியின் நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தன. இதைத்தொடர்ந்து... தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், என மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு தாவிய வரலட்சுமி, பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தார தப்பட்ட திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வெயிட்டான ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் இவருக்கு விமர்சன ரீதியான வெற்றியை மட்டுமே தந்தது.
அதே நேரம் அடுத்தடுத்த படங்கள் கிடைக்க காரணமாகவும் மாறியது. தற்போது தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் வரலட்சுமி. இவர் ஏற்கனவே பிரபல நடிகர் விஷாலை பல வருடங்கள் உருகி உருகி காதலித்து வந்த நிலையில், பின்னர் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்க பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வரலட்சுமியிடம் இருந்து பிரேக்கப் பண்ணி பிரிந்தார் விஷால்.
இதைத் தொடர்ந்து தனக்கு திருமணமே வேண்டாம் என கூறி வந்த வரலட்சுமி. அதிரடியாக கடந்த மார்ச் மாதம் தன்னுடைய 14 வருட நண்பர் நிக்கோலாயை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நிக்கோலாய் ஏற்கனவே கவிதா என்கிற மாடலை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர். மேலும் இவருக்கு 15 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். இந்த தகவல் வெளியாகி வரலட்சுமி ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் தன்னுடைய திருமணம் குறித்தும், கணவர் குறித்தும் வெளியான விமர்சனங்களுக்கு தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வந்த வரலட்சுமி சரத்குமார், ஒரு வழியாக தன்னுடைய காதலரை ஜூலை 3-ஆம் தேதி கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் முதலில் தாய்லாந்தில் நடந்த திட்டமிட்டதாகவும், பின்னர் ரிஜிஸ்டர் செய்வதில் பிரச்சனை வரும் என்பதால், சென்னையிலேயே நடந்ததாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
வரலட்சுமி திருமணம் குறித்து பேசியுள்ள பயில்வான், இந்த திருமணத்தில் சரத்குமாரின் முதல் மனைவியும் வரலட்சுமியின் அம்மாவுமான சாயாதேவி கலந்து கொள்ளவில்லை என்றும், இதற்கு காரணம் வரலட்சுமியாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னை தாஜ் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடந்ததாகவும், லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்து முடிந்ததாகவும் அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்களாம்.
குறிப்பாக தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த், வரலட்சுமி கேட்டுக் கொண்டதால் தன்னுடைய சிக்னேச்சர் ஸ்டெப்ஸை போட்டு டான்ஸ் ஆடினாராம்.
மேலும் நிக்கோலாய் ஏற்கனவே மும்பையில் தன்னுடைய இரண்டாவது மனைவியான வரலட்சுமிக்கு 200 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி வைத்துள்ள நிலையில், தங்க செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்கம் மற்றும் வைர நகைகள் போன்றவற்றை கொடுத்து அசத்தியுள்ளார். இது போன்ற காஸ்டலியான பரிசுகளினால் வரலட்சுமி செம்ம ஹாப்பியாக உள்ளாராம். மேலும் நிக்கோலாயை சொத்துக்காக மட்டும் தான் வரலட்சுமி திருமணம் செய்து இருக்கிறார் என்று புதுசாக ஒரு தகவலை கொளுத்தியும் போட்டுள்ளார் பல்வான். இதற்கு கூடிய விரைவில் வரலட்சுமி தரப்பில் இருந்து உரிய பதிலடி கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.