- Home
- Gallery
- Tamilnadu Rain: 10 மணிக்குள் இந்த 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!
Tamilnadu Rain: 10 மணிக்குள் இந்த 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

chennai rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamil Nadu Rain
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Meteorological Center
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!
Weather Forecast
அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.