- Home
- Gallery
- மனைவி சோனாக்ஷி சின்ஹாவுக்கு BMW சொகுசு காரை பரிசாக வழங்கிய ஜாகீர் இக்பால்.. விலை இத்தனை கோடியா?
மனைவி சோனாக்ஷி சின்ஹாவுக்கு BMW சொகுசு காரை பரிசாக வழங்கிய ஜாகீர் இக்பால்.. விலை இத்தனை கோடியா?
தனது மனைவிக்கு சோனாக்ஷி சின்ஹாவுக்கு பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் செடான் காரை இக்பால் பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sonakshi Sinha Zaheer Iqbal
பிரபல பாலிவுட் நடிகரான சத்ருஹன் சின்ஹாவின் மகளும் பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்து கொண்டார். கடந்த 23-ம் தேதி மும்பையில் நடந்த திருமணம் மற்றும் திருமண வரவேற்பில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Sonakshi Sinha Zaheer Iqbal
இந்த நிலையில் தனது மனைவிக்கு சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் செடான் காரை இக்பால் பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sonakshi Sinha Zaheer Iqbal wedding
புதுமணத் தம்பதிகள் ஆடம்பரமான BMW காரில் தங்களுடைய வரவேற்பு இரவுக்காக மும்பையின் லிங்க்கிங் சாலையில் உள்ள பாஸ்டியன் என்ற உணவகத்திற்கு வந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sonakshi Sinha Zaheer Iqbal
காரின் பின் இருக்கையில் அமர்ந்து சோனாக்ஷியும் ஜாகிரும் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. 2 கோடிக்கு மேல் மதிப்புள்ள BMW i7 எலக்ட்ரிக் செடானை ஜாகீர் தனது மனைவிக்கு பரிசாக அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sonakshi Sinha Zaheer Iqbal
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 36வது மாடியில் உள்ள ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை நடிகை சோனாக்ஷி சின்ஹா வாங்கியதாக கூறப்படுகிறது. கடலை பார்க்கும் படி அமைந்திருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு 4,210.87 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 11 கோடி என்று கூறப்படுகிறது.
Sonakshi Sinha Zaheer Iqbal
தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இதை தொடர்ந்து ரவுடி ரத்தோர், தபாங் 2, சன் ஆஃப் சர்தார் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சோனாக்ஷி நடித்திருந்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் பெரிதாக எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
Sonakshi Sinha Zaheer Iqbal
2023 ஆம் ஆண்டில், OTT இல் நுழைந்தார். தஹாத் என்ற வெப் சீரிஸில் அறிமுகமானார். இந்த சீரிஸில் காவல்துறை அதிகாரியாக அவர் நடித்திருந்தார்.. அவரின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
Sonakshi Sinha Zaheer Iqbal
இதை தொடர்ந்து தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமாண்டி வெப் சீரிஸில் சோனாக்ஷி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். ரெஹானா மற்றும் ஃபரீதன் என்று இரட்டை வேடங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் சோனாக்ஷி.
Sonakshi Sinha Zaheer Iqbal
தற்போது சோனாக்ஷி 'ககுடா' என்ற ஹாரர் காமெடி படத்தில் நடித்து வருகிறார். ஆதித்யா சர்போத்தார் இயக்கி வரும் இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது தவிர 'நிகிதா ராய் மற்றும் தி புக் ஆஃப் டார்க்னஸ்' என்ற படத்தையும் சோனாக்ஷி கைவசம் வைத்திருக்கிறார். .